மாத ராசி பலன் (15-06-2017 to 16-07-2017)
மேஷம்

நெஞ்சுக்கு நிம்மதி

இந்த மாதம் கூடு­தல் பலனை எதிர்­பார்க்­க­லாம். முக்­கிய கிர­கங்­க­ளில் 11ல் கேது தொடர்ந்து நன்மை தரு­வார். உங்­கள் ராசி­யில் இருக்­கும் சுக்­கி­ரன் மாதம் முழு­வ­தும் நன்மை தரு­வார். சூரி­ யன், செவ்­வாய், மிது­னத்­தில் இருந்து முன்­னே

ற்­றத்தை ெகாடுப்­பார்­கள். தற்­போது மிது­னத்­தில் இருக்­கும் புதன் ஜூன் 29ல், கட­கத்­திற்கு மாறி நன்மை தரு­வார்.

எடுத்த செயல்­க­ளில் வெற்றி காண­லாம். ஆன்­மிக எண்­ணங்­கள் மன­நிம்­மதி தரும். பொரு­ளா­தார வளம் மேம்­ப­டும். மகிழ்ச்சி அதி­க­ரிக்­கும். ஜூன் 20, 21ல் பெண்­கள் மிக­வும் உத­வி­க­ர­மாக இருப்­பர். ஜூன் 15, 16 ஜூலை 12, 13,14ல் உற­வி­னர்­கள் வரு­கை­யும், அவர்­க­ளால் நன்­மை­யும் கிடைக்­கும். அதே நேரம் ஜூன் 26, 27ல் அவர்­கள் வகை­யில் மனக்­க­சப்பு வர­வாய்ப்பு உண்டு. கவ­ன­மாக இருக்­க­வும். வீடு, மனை, வாக­னம் வாங்க யோகம் கூடி வரும்.

தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு செல்­வாக்கு அதி­க­ரிக்­கும். லாபம் சிறப்­பாக இருக்­கும். ஜூலை 15க்கு பிறகு பொன், பொருள் சேரும். ஜூன் 28 வரை சற்று கவ­ன­மாக இருக்­க­வும். அரசு வகை­யில் பிரச்னை வர­லாம். சிலர் திடீர் சோத­னைக்கு ஆளா­க­லாம்.  

வியா­பா­ரி­க­ளுக்கு அர­சின் சலுகை, வங்­கிக் கடன் எளி­தாக கிடைக்­கும். ஜூன் 17, 18, 19, 22, 23, ஜூலை 15, 16ல் கல்­லாப்­பெட்டி உங்­கள் பொறுப்­பில் இருப்­பது நல்­லது.

பணி­யா­ளர்­கள் சிறப்­பான பலனை பெறு­வர். பணி­யில் ஜூன் 28 வரை கவ­ன­மாக இருக்­க­வும். அதன்­பின் பதவி உயர்வு கிடைக்­கும்.

உங்­கள் செல்­வாக்கு அதி­க­ரிக்­கும். வேலை கார­ண­மாக குடும்­பத்தை விட்டு பிரிந்து இருந்­த­வர்­கள் ஒன்று சேரு­வர். அரசு வகை­யில் எதிர்­பார்த்த கடன் எளி­தில் கிடைக்­கும். ஜூலை 10, 11 உன்­ன­த­மான நாட்­க­ளாக இருக்­கும். கலைஞர்­கள் சுக்­கி­ர­னின் பலத்­தால் முன்­னேற்­றம் காண்­பர். அர­சி­யல்­வா­தி­கள் நல்ல அந்­தஸ்தை பெறு­வர். தொண்­டர்­க­ளின் ஆத­ரவு இருப்­ப­ தால், மேலி­டத்­தில் எது கேட்­டா­லும் கிடைக்க வாய்ப்­புண்டு.

மாண­வர்­க­ளுக்கு ஆசி­ரி­யர்­கள் ஆலோ­சனை கிடைக்­கும். ஜூன் 28 வரை புதன் சாத­க­மற்ற இடத்­தில் இருப்­ப­தால் போட்­டி­க­ளில் சிரத்தை எடுத்­தால்­தான் வெற்றி கிடைக்­கும்.

விவ­சா­யி­கள் நல்ல பலன் கிடைக்­கப் பெறு­வர். நெல், கோதுமை, சோளம் மற்­றும் மானா­வாரி பயிர்­கள் நல்ல மக­சூல் கொடுக்­கும்.

பெண்­க­ளுக்கு முன்­னேற்­ற­மான மாதம். கண­வ­ரின் அன்பு கிடைக்­கும். ஜூலை 3, 4ல் பெற்­றோர் வீட்­டில் இருந்து உத­வி­கள் வரப்­பெற்று சிறப்­பான நாட்­க­ளாக அமை­யும்.

ஜூன் 28க்கு பிறகு மதிப்பு, மரி­யாதை அதி­க­ரிக்­கும். ஒதுங்­கிப் போயி­ருந்த உற­வி­னர்­க­ளால் உதவி கிடைக்­கும். திரு­ம­ணம் போன்ற சுப நிகழ்ச்­சி­கள் பற்­றிய பேச்சு எழுந்து சுப­மாக பூர்த்­தி­யா­கும். புண்­ணி­யத்­த­லங்­க­ளுக்கு சென்று வர­லாம். ஜூன் 24, 25ல் புத்­தாடை, நகை வாங்­க­லாம்.

ஜூன் 28, 29 ஜூலை 8, 9ல் உடல்­ந­ல­னில் அக்­கறை காட்­ட­வும். பிற­ருக்கு கட்­டுப்­பட்டு போகும் நிலை உரு­வா­கும். ஒரு­வித பயம் ஆட்­கொள்­ளும். வயிறு தொடர்­பான உபாதை வர­லாம்.

பரி­கா­ரம்

* திங்­க­ளன்று சிவன் கோவி­லில் தீபம்

* ராகு காலத்­தில் பைர­வ­ருக்கு அர்ச்­சனை

* பவுர்­ண­மி­யன்று அம்­மன் வழி­பாடு

நல்ல நாள் : ஜூன் 16, 20, 21, 24, 25, 30

ஜூலை 1, 2, 3, 10, 11, 12, 13, 14

கவன நாள் : ஜூலை 4, 5, 6 சந்­தி­ராஷ்­ட­மம்.

அதிர்ஷ்ட எண் : 3, 9

நிறம் : வெள்ளை, சிவப்பு.


ரிஷபம்

குடும்பத்துடன் சுற்றுலா

இந்த மாதம் ஐந்­தாம் இட­மான கன்­னி­யில் உள்ள குரு தொடர்ந்து நன்மை தரு­வார். குடும்­ப த்­தில் குதுா­க­லம் ஏற்­ப­டும். செவ்­வாய் ஜூலை 22ல் மிது­னத்­தில் இருந்து கட­கத்­திற்கு மாறி நன்மை தரு­வார். திரு­ம­ணம் போன்ற சுப நிகழ்ச்­சி­களை நடத்தி வைப்­பார். பொரு­ளா­தார வளத்தை அதி­க­ரிக்க செய்­வார். குழந்தை பாக்­கி­யம் கிடைக்­கும். வாழ்க்­கை­யில் வளம் காண­லாம். எடுத்த செயல்­களை சிறப்­பாக முடிக்­க­லாம்.

சில சம­யங்­க­ளில் சூரி­ய­னால் பொருள் விர­ய­மும்  புத­னால் அவப்­பெ­ய­ரும், செல்­வாக்­குக்கு பாதிப்­பும் ஏற்­ப­ட­லாம். சற்று சிர­ம­மான சூழ்­நி­லை­கள் எட்­டிப்­பார்க்­கும் போது, நமக்கு வேண்­டா­த­வர்­க­ளி­டம் இருந்து ஒதுங்கி இருந்­தாலே இந்த பிரச்­னை­கள் சீரா­கி­வி­டும். ஜூன் 28க்கு பிறகு புதன் 3ம் இடத்­தில் இருப்­ப­தால் பகை­வர்­க­ளால் இடை­யூறு வர­லாம்.  அரசு வகை­யில் அனு­கூ­ல­மான போக்கு காணப்­ப­ட­வில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரி­யாக வைத்­துக் கொள்­ள­வும்.

மற்ற கிர­கங்­க­ளின் அடிப்­ப­டை­யில் ஜூன் 22, 23ல் பெண்­கள் மிக­வும் உத­வி­க­ர­மாக இருப்­பர். ஜூன் 17, 18, 19, ஜூலை 15, 16ல் உற­வி­னர்­க­ளின் வரு­கை­யும் அவர்­க­ளால் நன்­மை­யும் கிடைக்­கும். அதே நேரம் ஜூன் 28, 29ல் அவர்­கள் வகை­யில் விரோ­தம் வர வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்­க­வும். ஜூன் 26, 27ல் புத்­தாடை, நகை வாங்­க­லாம். ஜூலை 28க்கு பிறகு குடும்­பத்­தோடு ஆன்­மிக சுற்­றுலா சென்று வரு­வீர்­கள்.

தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு செவ்­வாய் சாத­க­மற்ற இடத்­தில் இருப்­ப­தால் பொருள் களவு ஏற்­பட வாய்ப்பு உண்டு. பாது­காப்பை பலப்­ப­டுத்­த­வும்.

போட்­டி­யா­ளர்­கள் வகை­யில் தொல்லை வரும். அரசு வகை­யில் அனு­கூ­ல­மான போக்கு காணப்­ப­ட­வில்லை. வரவு, செலவு கணக்கை சரி­யாக வைத்­துக் கொள்­ள­வும். தொழி­லா­ளர் ஆத­ரவு சுமா­ரா­கவே இருக்­கும்.

அனு­ப­வ­சா­லி­க­ளின் ஆலோ­ச­னையை பின்­பற்­று ­வது நல்­லது. ஜூன் 21, 21, 24, 25ல் நிர்­வா­கத்தை உங்­கள் நேரடி பார்­வை­யில் வைத்­துக் கொள்­ள­வும்.

பணி­யா­ளர்­க­ளுக்கு குரு­வால் பதவி உயர்வு கிடைக்­கும். இட­மாற்­றம் ஏற்­ப­டுமோ என பயந்து இருந்­த­வர்­க­ளக்கு அந்த பிரச்னை நீங்கி விடும். ஜூன் 28க்கு பிறகு ஊழி­யர்­கள் வேலை­யில் கவ­ன­மு­டன் இருக்­க­வும். ஜூன் 15, 16 ஜூலை 12, 13, 14ல் எதிர்­பா­ராத வரு­மா­னத்­துக்கு இட­முண்டு.

விவ­சா­யி­க­ளுக்கு பழம், பயறு, எள், கரும்பு மூலம் நல்ல வரு­மா­னம் காண­லாம். கால்­நடை வளர்ப்­பின் மூலம் எதிர்­பார்த்த ஆதா­யம் கிடைக்­கும். ஜூன் 28க்கு பிறகு புதிய சொத்து வாங்க அனு­கூ­லம் உண்டு.

மாண­வர்­க­ளுக்கு குரு­வால் முன்­னேற்ற பலன்­கள் கிடைக்­கும். புதன் சாத­க­மாக இல்­லா­த­தால் போட்­டி­க­ளில் வெற்றி காண கடும் முயற்சி எடுக்க வேண்­டும்.

பெண்­கள் குடும்ப வாழ்­வில் குதுா­க­ல­மாக இருப்­பர். ஜூன் 5, 6 , 7 சிறப்­பான நாட்­க­ளாக அமை­யும். பிறந்த வீட்­டில் இருந்து பொருட்­கள் வரும். வேலை பார்க்­கும் பெண்­கள் ஜூன் 28க்கு பிறகு உயர் பதவி அடைய வாய்ப்பு இருக்­கி­றது. பெண்­களை பங்­கு­தா­ர­ராக கொண்ட தொழில் நிறு­வ­னங்­கள் சிறப்­ப­டை­யும்.

பரி­கா­ரம்

* தின­மும் காலை­யில் சூரிய வழி­பாடு

* செவ்­வா­யன்று முரு­க­னுக்கு பாலா­பி­ஷே­கம்

* புதன்­கி­ழமை குல­தெய்வ வழி­பாடு.

நல்ல நாள் : ஜூன் 15, 16, 17, 18, 19, 22, 23, 26, ஜூலை 3, 4, 5, 6, 12, 13, 14, 15, 16

கவன நாள் : ஜூலை 7, 8, 9 சந்­தி­ராஷ்­ட­மம்.

அதிர்ஷ்ட எண் : 2, 3

நிறம் : மஞ்­சள், சிவப்பு.


மிதுனம்

எதிர்பாராத வருமானம்

சுக்­கி­ரன், சனி, ராகு மாதம் முழு­வ­தும் நற்­ப­லன் தர காத்­தி­ருக்­கின்­ற­னர். புதிய முயற்­சி­க­ளில் வெற்றி உண்­டா­கும். பொரு­ளா­தார வளம் சிறக்­கும். ஜூன் 28 வரை குடும்­பத்­தில் பிரச்னை ஏற்­ப­ட­லாம். உற­வி­னர் வகை­யில் கருத்து வேறு­பாடு உரு­வா­க­லாம். சூரி­யன் சாத­க­மற்ற இடத்­தில் இருப்­ப­தால் வீண் பேச்சை தவிர்க்­க­வும். வீண் அலைச்­சல், சோர்வு குறுக்­கி­ட­லாம். செல்­வாக்கு பாதிக்­கப்­ப­ட­லாம்.

குடும்­பத்­தேவை குறை­வின்றி பூர்த்­தி­யா­கும். பண­வ­ரவு சீராக இருக்­கும். பெண்­க­ளால் ஜூன் 24, 25 ஆகிய நாட்­க­ளில் நன்மை உண்­டா­கும். ஜூன் 20, 21ல் உற­வி­னர் வரு­கை­யும் அவர்­க­ளால் நன்­மை­யும் கிடைக்­கும். தே நேரம் ஜூன் 30, ஜூலை 1, 2ல் அவர்­கள் வகை­யில் கருத்து வேறு­பாடு ஏற்­ப­ட­லாம். சற்று விலகி இருக்­க­வும். ஜூன் 28, 29ல் புத்­தாடை, அணி­க­லன் வாங்­க­லாம். உடல் நலம் லேசாக பாதிக்­கப்­ப­டும். உஷ்ண வியா­தி­க­ளால் சிர­மம் ஏற்­ப­ட­லாம்.

ஜூன் 15, 16, ஜூலை 3, 4, 12, 13, 14ல் உடல் நல­னில் அக்­கறை கொள்­வது நல்­லது. அலைச்­சலை தவிர்ப்­ப­தும் அவ­சி­யம்.

தொழில், வியா­பா­ரத்­தில் வரு­மா­னத்­துக்கு குறை­வி­ருக்­காது. தொழி­லா­ளர்­க­ளின் ஆத­ரவு வளர்ச்­சிக்கு கைகொ­டுக்­கும். சக தொழி­ல­தி­பர்­க­ளின் மத்­தி­யில் ந்றபெ­யர் உண்­டா­கும். ஜூன் 28 வரை நிர்­வா­கச் செலவு அதி­க­ரிக்­கும். எதி­ரி­க­ளின் இடை­யூறை சந்­திக்க வேண்­டி­ய­தி­ருக்­கும். தொழில் ரீதி­யான பய­ணம் அடிக்­கடி மேற்­கொள்­வர். ஜூன் சந்­திக்க வேண்­டி­ய­தி­ருக்­கும். ஜூலை 5, 6, 7ல் எதிர்­பா­ராத வரு­மா­னம் அதிர்ஷ்­ட­வ­ச­மாக கிடைக்­கும்.

பணி­யா­ளர்­கள் பணிச்­சு­மை­யைச் சந்­திக்க வேண்­டி­ய­தி­ருக்­கும். சற்று முயற்சி எடுத்­தால் மட்­டுமே கோரிக்கை நிறை­வே­றும். சக ஊழி­யர்­க­ளின் ஒத்­து­ழைப்பு சீராக கிடைக்­கும். புதன் சாத­க­மற்ற நிலை­யில் இருப்­ப­தால் பணி­யா­ளர்­கள் திடீர் இட­மாற்­றத்­தைச் சந்­திப்­பர். ஜூன் 26க்கு பிறகு செல்­வாக்­குக்கு பாதிப்பு ஏற்­ப­ட­லாம். சில­ருக்கு வீண் மனக்­க­வலை வர­லாம். ஜூன் 17, 18, 19, ஜூலை 15, 16ல் அலு­வ­லக ரீதி­யாக முன்­னேற்­ற­மாக சம்­ப­வம் நடக்­கும்.

கலை­ஞர்­கள் முன்­னேற்ற பாதை­யில் செல்­வர். புதிய ஒப்­பந்­தம் மூலம் வரு­மா­னம் கிடைக்­கப் பெறு­வர்.

அர­சாங்­கத்­தி­டம் இருந்து விருது, பாராட்டு போன்­றவை கிடைக்­கும். அர­சி­யல்­பா­தி­கள், பொது­நல சேவ­கர்­கள் மக்­க­ளின் மத்­தி­யில் நற்­பெ­யர் காண்­பர். தலை­மை­யின் ஆத­ர­வால் உயர்­ப­தவி கிடைக்க வாய்ப்­புண்டு.

மாண­வர்­க­ளுக்கு புதன் சாத­க­மற்ற இடத்­தில் இருப்­ப­தால் போட்­டி­க­ளி­வல் வெற்றி காண்­பது அரிது. ஆனால், விடா­மு­யற்­சிக்கு தகுந்த பலன் உண்­டா­கும்.

விவ­சா­யி­க­ளுக்கு கால்­நடை வளர்ப்­பின் மூலம் எதிர்­பார்த்த வரு­மா­னம் கிடைக்­கும்.

பெண்­க­ளால் குடும்­பம் சிறந்து விளங்­கும். கண­வ­ரின் அன்­பும், ஆத­ர­வும் கிடைக்­கும். பிள்­ளை­க­ளின் வளர்ச்சி கண்டு பெருமை கொள்­வீர்­கள். விருந்து, விழா என சென்று வரு­வீர்­கள். சகோ­தர வழி­யில் எதிர்­பார்த்த உதவி கிடைக்­கும்.

பரி­கா­ரம்

* செவ்­வா­யன்று முரு­க­னுக்கு பாலா­பி­ஷே­கம்

* தின­மும் காலை­யில் சூரிய நமஸ்­கா­ரம்

* பிர­தோ­ஷத்­தன்று நந்­தீஸ்­வ­ர­ருக்கு விளக்கு.

நல்ல நாள் : ஜூன் 17, 18, 19, 20, 21, 24, 25, 28, 29

ஜூலை 5, 6, 7, 8, 9, 15, 16

கவன நாள் : ஜூலை 10, 11 சந்­தி­ராஷ்­ட­மம்.

அதிர்ஷ்ட எண் : 4, 8

நிறம் : நீலம், வெள்ளை.

கடகம்

பொன் பொருள் சேரும்

பெரும்­பா­லான கிர­கங்­கள் சாத­க­மற்ற இடத்­தில் இருப்­ப­தால் எந்த ஒரு காரி­யத்­தை­யும் சற்று முயற்சி எடுத்தே நிறை­வேற்ற வேண்­டி­ய­தி­ருக்­கும். ஆனால் உங்­கள் முயற்­சிக்கு தகுந்த பலன் கிடைக்­கா­மல் போகாது. முக்­கிய முடி­வு­களை தீர சிந்­தித்த பிறகே செயல்­ப­டுத்­து­வது நல்­லது. இருப்­பி­னும் குரு­வின் 5, 7, 9ம் இடத்­துப் பார்­வை­கள் சிறப்­பாக அமைந்து உள்­ள­தால் எந்த பிரச்­னை­யை­யும் முறி­ய­டித்து வெற்­றிக்கு வழி காண­லாம். 5ம் இடத்து பார்­வை­யால் குடும்­பத்­தில் மகிழ்ச்­சியை அதி­க­ரித்து சுப நிகழ்ச்­சியை தரு­வார். செல்­வாக்கு மேம்­ப­டும்.

பணப்­பு­ழக்­கம் அதி­க­ரிக்­கும். தேவை குறை­யின்றி நிறை­வே­றும். பணி­யா­ளர்­க­ளுக்கு உயர்வை தரு­வார். 7ம் இடத்­துப் பார்­வை­யால் மகிழ்ச்சி அதி­க­ரிக்­கும். நினைத்­ததை வெற்­றி­க­ர­மாக செய்து முடிக்­க­லாம். கையில் பணப்­பு­ழக்­கம் அதி­க­ரிக்­கும். 9ம் இடத்­துப் பார்­வை­யால் குடும்­பத்­தில் இருந்து வந்த பின்­ன­டைவு மறை­யும். தம்­ப­தி­யி­டையே ஒற்­றுமை மேம்­ப­டும். தம்­ப­தி­யி­டையே ஒற்­றுமை மேம்­ப­டும். உற­வி­னர்­கள் உத­வி­க­ர­மாக இருப்­பர். உங்­களை புரிந்து கொள்­ளா­மல் இருந்­த­வர்­கள் உங்­கள் மேன்­மையை அறிந்து சர­ண­டை­யும் நிலை வர­லாம்.

பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வரு­வீர்­கள். கண­வன், மனைவி இடையே அன்பு நீடிக்­கும். ஜூன் 26க்கு பிறகு கண­வன், மனைவி இடையே கருத்து வேறு­பாடு வர­லாம். ஒரு­வ­ருக்கு ஒரு­வர் வீட்­டுக் கொடுத்து போக­வும். சுப நிகழ்ச்­சி­கள் கைகூட கால­தா­ம­தம் ஏற்­ப­ட­லாம். ஜூன் 24, 25ல் பெண்­கள் மிக­வும் உத­வி­க­ர­மாக இருப்­பர். ஜூன் 22, 23ல் உற­வி­னர் வரு­கை­யும், அவர்­க­ளால் நன்­மை­யும் உண்­டா­கும். ஜூன் 30, ஜூலை 1, 2ல் புத்­தாடை, அணி­க­லன்­கள் வாங்­க­லாம். அடிக்­கடி விருந்து, விழா சென்று வர வாய்ப்­புண்­டா­கும். உடல்­நிலை சுமா­ராக இருக்­கும்.

தொழில், வியா­பா­ரத்­தில் அதி­க­மாக உழைக்க வேண்­டி­ய­தி­ருக்­கும். ஆனால், முயற்­சிக்­கேற்ப வளர்ச்சி இல்­லா­மல் போகாது. தொழில் விஷ­ய­மாக யாரி­ட­மும் வாக்­கு­வா­தம் செய்ய வேண்­டாம். ஜூன் 24, 25, 28, 29ல் சந்­தி­ர­னால் சிறு தடை­கள் குறுக்­கி­ட­லாம்.

பணி­யா­ளர்­க­ளுக்கு வேலைப்­பளு குறுக்­கிட்­டா ­லும் திறம்­பட சமா­ளிப்­பர். அதி­கா­ரி­க­ளின் ஆத­ரவு சீராக இருக்­கும். மாத பிற்­ப­கு­தி­யில் அரசு ஊழி­யர்­கள் வேலை­யில் கவ­ன­மு­டன் இருக்­க­வும்.

கலை­ஞர்­கள் சீரான வளர்ச்சி காண்­பர். எதிர்­பார்த்த புகழ், பாராட்டு போன்­றவை கிடைப்­பது அரிது. மாண­வர்­கள் ஆசி­ரி­யர்­க­ளி­டம் அறி­வு­ரையை பின்­பற்றி நடப்­பது நல்­லது. புதன் சாத­க­மற்ற இடத்­தில் இருப்­ப­தால் படிப்­பில் கூடு­தல் கவ­னம் தேவை.

விவ­சா­யி­க­ளுக்கு வரு­மா­னத்­திற்கு குறை­ வி­ருக்­காது. ஊடு­ப­யிர் சாகு­படி மூலம் ஆதா­யம் காண்­பர். கால்­நடை வளர்ப்­பின் மூலம் அதிக வரு­வாயை எதிர்­பார்க்­க­லாம். புதிய சொத்து வாங்­கும் எண்­ணம் தடை­ப­ட­லாம்.

பெண்­கள் குடும்ப வாழ்­வில் குதுா­க­லம் காண்­பர். சில­ருக்கு குழந்தை பாக்­கி­யம் கிடைக்க வாய்ப்­புண்டு.

பரி­கா­ரம்

* சனிக்­கி­ழமை பெரு­மா­ளுக்கு துளசி அர்ச்­சனை

* செவ்­வா­யன்று முரு­க­னுக்கு பாலா­பி­ஷே­கம்

* பவுர்­ண­மி­யன்று அம்­மன் கோவில் வழி­பாடு.

நல்ல நாள் : ஜூன் 20, 21, 22, 23, 26, 27, 30

ஜூலை 1, 2, 8, 9, 10, 11

கவன நாள் : ஜூன் 15, 16, ஜூலை 12, 13, 14 சந்­தி­ராஷ்­ட­மம்.

அதிர்ஷ்ட எண் : 1, 5

நிறம் : மஞ்­சள், வெள்ளை.

சிம்மம்

அரசு வகையில் ஆதாயம்

இந்த மாதம் 11ல் உள்ள செவ்­வாய், சூரி­ய­னால் நன்மை அதி­க­ரிக்­கும். புதன் 11ம் இட­மான மிது­னத்­தில் இருந்து ஜூன் 28 வரை நன்மை தரு­வார். அதன் பின் அவர் கட­கத்­திற்கு வரு­வ­தால் நற்­ப­லன் குறை­யும். குரு, சுக்­க­ர­னால் வளர்ச்சி உண்­டா­கும். இது சிறப்­பான மாத­மாக அமை­யும்.

குரு பக­வான் உங்­கள் ராசிக்கு 2ம் இடத்­தில் இருப்­ப­தால் ஆற்­றல் மேம்­ப­டும். கடந்த காலத்­தில் இருந்த மந்­த­நிலை அக­லும். மன­தில் துணிச்­சல் பிறக்­கும். வரு­மா­னம் உய­ரும். வீட்­டுத் தேவை­கள் ஆடம்­பர முறை­யில் நிறை­வே­றும். பகை­வர்­க­ளின் சதி இனி உங்­க­ளி­டம் எடு­ப­டாது. அவர்­கள் சரண் அடை­யும் நிலை­யும் உரு­வா­கும். சமூ­கத்­தில் மதிப்பு, மரி­யாதை அதி­க­ரிக்­கும். அர­சாங்க வகை­யில் ஆதா­யம் கிடைக்­கும். கடந்த காலத்­தில் இருந்த நோய் தொந்­த­ரவு மறை­யும். பூரண குணம் பெற்று பணி­யில் ஆர்­வ­மு­டன் ஈடு­ப­டு­வீர்­கள்.

குடும்­பத்­தில் கண­வன், மனைவி இடையே அன்பு மேலோங்­கும். சுப நிகழ்ச்­சி­கள் விம­ரி­சை­யாக நடந்­தே­றும். பெண்­க­ளால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என குடும்­பத்­து­டன் சென்று வரு­வீர்­கள். ஜூன் 28, 29 ஆகிய நாட்­க­ளில் பெண்­கள் மிக­வும் உறு­து­ணை­யாக இருப்­பர். ஜூலை 8, 9ல் உற­வி­னர் வகை­யில் கருத்து வேறு­பாடு ஏற்­ப­ட­லாம். அதே நேரம் ஜூன் 24, 25ல் விருந்­தி­னர் வரு­கை­யும், அவர்­க­ளால் நன்­மை­யும் கிடைக்­கும். ஜூலை 3, 4ல் புத்­தாடை, அணி­க­லன்­கள் வாங்க யோக­முண்டு.

தொழில், வியா­பா­ரத்­தில் பெண்­கள் வகை­யில் இருந்து வந்த தொல்லை மறை­யும். புதிய தொழில் முயற்­சி­யில் வெற்றி கிடைக்­கும். பெண்­களை பங்­கு­தா­ர­ராக கொண்ட நிறு­வ­னம் முன்­னேற்­றம் அடை­யும். பொரு­ளா­தார வளம் சிறக்­கும். வங்கி இருப்பு உய­ரும், அர­சாங்க வகை­யில் எதிர்­பார்த்த சலுகை கிடைக்­கும். சக தொழி­ல­தி­பர்­க­ளின் மத்­தி­யில் செல்­வாக்கு அதி­க­ரிக்­கும். ஜூன் 26, 27, 30 ஜூலை 1, 2ல் சந்­தி­ர­னால் சிறு தடை­கள் வர­லாம்.

பணி­யா­ளர்­க­ளுக்கு கோரிக்­கை­கள் விரை­வில் நிறை­வே­றும்.  சக ஊழி­யர்­க­ளின் அன்­பும், ஆத­ர­வும் கிடைக்­கும். கடந்த காலத்­தில் இருந்த பணிச்­சுமை இனி இருக்­காது. ஜூன் 22, 23 ஆகிய நாட்­கள் சிறப்­பா­ன­தாக அமை­யும். கலை­ஞர்­கள் கடந்த மாதம் இருந்த பின்­தங்­கிய நிலை­யில் இருந்து விடு­ப­டு­வர்.  

மாண­வர்­க­ளுக்கு புதன் சாத­க­மாக இருப்­ப­தால் கல்வி வளர்ச்சி காண்­பர். கலை மற்­றும் விளை­யாட்டு போட்­டி­க­ளில் பங்­கேற்று வெற்றி காண­லாம். குரு பக்­க­ப­ல­மாக இருப்­ப­தால் முயற்­சிக்கு தகுந்த முன்­னேற்­றம் உண்­டா­கும்.

விவ­சா­யி­க­ளுக்கு விளைச்­சல் நன்­றாக இருக்­கும். விளை­பொ­ருளை அதிக விலைக்கு விற்று அமோக லாபம் காண்­பர். கால்­நடை வளர்ப்­பின் மூலம் நல்ல ஆதா­யம் கிடைக்­கும்.

பெண்­கள் கண­வர் மற்­றும் குடும்­பத்­தி­னர் மத்­தி­யில் பாராட்டு காண்­பர். அக்­கம்­பக்­கத்­தி­ன­ரு­டன் இருந்த கருத்து வேறு­பாடு மறை­யும். ஜூன் 15, 16, ஜூலை 12, 13, 14 ஆகிய நாட்­க­ளில் எதிர்­பார்ப்பு நிறை­வே­றும். பிறந்த வீட்­டில் இருந்து சீத­னப்­பொ­ருள் கிடைக்­கப் பெற­லாம்.

பரி­கா­ரம்

* தேய்­பிறை சதுர்த்­தி­யில் விநா­ய­கர் வழி­பாடு

* சனி­யன்று சனீஸ்­வ­ர­ருக்கு எள்­தீ­பம்

* வெள்­ளி­யன்று லட்­சு­மிக்கு நெய் தீபம்.

நல்ல நாள் : ஜூன் 15, 16, 22, 23, 24, 25, 28, 29

ஜூலை 3, 4, 10, 11, 12, 13, 14

கவன நாள் : ஜூன் 17, 18, 19 ஜூலை 15, 16 சந்­தி­ராஷ்­ட­மம்.

அதிர்ஷ்ட எண் : 1, 9

நிறம் : பச்சை, சிவப்பு.

கன்னி

போட்டியில் வெற்றி

சிறப்­பான மாத­மாக அமை­யும். முக்­கிய கிர­கங்­க­ளில் 3ல் சனி, 6ல் கேது, 8ல் சுக்­கி­ரன் ஆகி­யோ­ரால் தொடர்ந்து நன்மை உண்­டா­கும். 10ம் இடத்­தில் இருக்­கும் சூரி­ய­னால் மாதம் முழு­வ­தும் நன்மை ஏற்­ப­டும். புத­னும் ஜூன் 28ல் மிது­னத்­தில் இருந்து கட­கத்­திற்கு இடம் மாறி­னா­லும் மாதம் முழு­வ­தும் நன்­மை­ய­ளிப்­பார்.

சுக்­கி­ரன் ஜூலை 2 வரை கட­கத்­தில் இருந்து நன்மை தரு­வார். சூரி­யன் சாத­க­மாக காணப்­ப­டு­வ­தால் பொரு­ளா­தா­ரம் சிறக்­கும். புதிய முயற்­சி­க­ளில் வெற்றி உண்­டா­கும்.

குடும்­பத்­தில் பெண்­க­ளின் ஆத­ரவு கிடைக்­கும். அவர்­க­ளால் பொன், பொருள் சேரும். ஜூன் 28க்கு பிறகு குடும்­பத்­தில் மகிழ்ச்சி அதி­க­ரிக்­கும். தொழி­லில் லாபம் உய­ரும். திரு­ம­ணம் போன்ற சுப நிகழ்ச்­சி­கள் விரை­வில் கைகூ­டும்.

ஜூன் 30, ஜூலை 1, 2ல் எதிர்­பா­ரா­மல் பணம் கிடைக்­கும். விருந்து, விழா என சென்று வரு­வீர்­கள். ஜூன் 26, 27ல் உற­வி­

­ன­ரக்ள் வரு­கை­யும் அவர்­க­ளால் நன்­மை­யும் கிடை க்கும். ஆனால் ஜூலை 8, 9ல் உற­வி­னர்­கள் வகை­யில் பிரச்னை குறுக்­கிட வாய்ப்­புண்டு. ஜூலை 12க்கு பிறகு புதிய வீடு, வாக­னம் வாங்­க­லாம்.

உடல்­நிலை சீராக இருக்­கும். செவ்­வாய் சாத­க­மற்ற இடத்­தில் இருப்­ப­தால் உஷ்­ணம், தோல், தொடர்­பான நோய் ஏற்­ப­ட­லாம். பய­ணத்­தின் போது கவ­னம் தேவை. ஜூன் 22, 23, ஜூலை 10, 11ல் வயிறு தொடர்­பான உபாதை வர­லாம்.

தொழில், வியா­பா­ரத்­தில் பணப்­பு­ழக்­கம் அதி­க­ரிக்­கும். குறைந்த முத­லீட்­டில் புதிய தொழில் தொடங்க அரு­மை­யான கால­கட்­ட­மாக அமை­யும். ஜூன் 28, 29, ஜூலை 3, 4ல் சந்­தி­ர­னால் தடை­கள் குறுக்கி­ டலாம். ஜூன் 15, 16 ஜூலை 12, 13, 14ல் எதிர்­பா­ராத வகை­யில் பணம் கிடைக்­கும். தீயோர் சேர்க்­கை­யால் அவ­திப்­பட்­ட­வர்­கள் அதி­லி­ருந்து விடு­பட்டு நிம்­மதி காண்­பர்.

பணி­யா­ளர்­க­ளுக்கு அதி­கா­ரி­க­ளின் ஆத­ர­வும், வழி­காட்­டு­த­லும் கிடைக்­கும். கோரிக்­கை­கள் ஒவ்­வொன்­றாக நிறை­வே­றும். சில­ருக்கு விரும்­பிய இட­மாற்­றம் கிடைக்­கும் படித்­த­வர்க ­ளுக்கு நல்ல சம்­ப­ளத்­தில் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

மாண­வர்­கள் படிப்­பில் மட்­டு­மில்­லா­மல் போட்­டி­யில் ஈடு­பட்டு வெற்றி காண்­பர். புதன் சாத­க­மான இடத்­தில் இருப்­ப­தால் கல்­வி­யில் சாதனை படைக்க வாய்ப்பு உண்­டா­கும்.

விவ­சா­யி­க­ளுக்கு விளைச்­சல் அதி­க­ரிப்­பால் வரு­மா­னம் உய­ரும். கால்­நடை வளர்ப்­பின் மூலம் ஆதா­யம் கிடைக்­கும். வழக்கு, விவ­கா­ரத்­தில் மெத்­த­னம் வேண்­டாம். ஜூலை 13க்கு பிறகு வழக்­கில் சாத­க­மான முடிவு கிடைக்­கும். கைவிட்டு போன பொருள் மீண்­டும் கிடைக்­கும்.

பெண்­கள் கண­வ­ரின் அன்பை பெற்று மகிழ்­வர். ஜூன் 17, 18, 19, ஜூலை 15, 16 சிறப்­பான நாட்­க­ளாக இருக்­கும். ஜூலை 5, 6, 7ல் புத்­தாடை, அணி­க­லன்­கள் வாங்­க­லாம்.

ஜூலை 13க்கு பிறகு வேலைக்கு செல்­லும் பெண்­கள் வளர்ச்சி பெறு­வர். சில­ருக்கு புதிய பதவி தேடி வரும். சுய தொழில் புரி­யும் பெண்­க­ளுக்கு வங்கி கடன் எளி­தாக கிடைக்­கும்.

பரி­கா­ரம்

* ராகு காலத்­தில் நாக­தே­வதை வழி­பாடு

* செவ்­வா­யன்று முரு­க­னுக்கு பாலா­பி­ஷே­கம்

* வியா­ழன்று தட்­சி­ணா­மூர்த்­திக்கு அர்ச்­சனை

நல்ல நாள் : ஜூன் 15, 16, 17, 18, 19, 24, 25, 26, 27, 30

ஜூலை 1, 2, 5, 6, 7, 12, 13, 14

கவன நாள் : ஜூன் 20, 21 சந்­தி­ராஷ்­ட­மம்.

அதிர்ஷ்ட எண் : 2, 5, 7

நிறம் : சிவப்பு, பச்சை.

துலாம்

பிள்ளைகளால் பெருமை

இந்த மாதம் பிற்­ப­கு­தி­யில் அதிக நன்­மை­கள் கிடைக்க வாய்ப்­புள்­ளது. ராகு 11ம் இடத்­தில் நின்று நன்மை தரு­வார். புதன் ஜூன் 29க்கு பிறகு சாத­க­மாக இருந்து சிறப்­பான பலனை தரு­வார். மற்ற கிர­கங்­கள் திருப்­தி­யற்ற நிலை­யில் உள்­ளன. எந்த செய­லை­யும் சற்று முயற்சி எடுத்தே நிறை­வேற்ற வேண்­டி­யி­ருக்­கும். கட­வு­ளின் கருணை கிடைக்­கும்.

ராகு தன் பலத்­தால் முயற்­சி­க­ளில் வெற்­றியை தரு­வார். பகை­வர்­க­ளின் சதியை முறி­ய­டிக்­கும் வல்­ல­மையை பெற்று இருக்­கி­றீர்­கள். உங்­கள் ஆற்­றல் மேம்­பட்டு இருக்­கும். புதன் ஜூன் 29 வரை 9ம் இடத்­தில் நிலை கொண்­டி­ருப்­ப­தால் சிலர் பொல்­லாப்பை சந்­திக்க நேரி­ட­லாம். பொறு­மை­யும், விட்டுக் கொடுத்து போவ­தும் நன்மை தரும். சிலர் சக­வாச தோஷத்­தால் பணத்தை விர­ய­மாக்­கு­வர்.

குரு 12ம் இடத்­தில் இருப்­ப­தால் பொருள் நஷ்­டம் ஏற்­ப­ட­லாம். பல்­வேறு தொல்­லை­கள் உரு­வா­கும்.

உங்­கள் செல்­வாக்கு வெளியே எப்­படி இருந்­தா­லும் வீட்­டில் தனி அந்­தஸ்­து­டன் இருப்­பீர்­கள். முயற்­சி­க­ளில் வெற்றி கிடைக்­கும். புத்­தாடை, நகை வாங்­க­லாம். பிள்­ளை­க­ளால் மகிழ்ச்­சி­யும் பெரு­மை­யும் கிடைக்­கும். கண­வன், மனைவி இடையே அன்பு மேம்­ப­டும். ஜூன் 29க்கு பிறகு பண­வ­ரவு அதி­க­மாக இருக்­கும். சொந்­த­பந்­தங்­கள் வரு­கை­யால் செல­வும் உண்டு. வீட்­டி­லும், அலு­வ­ல­கத்­தி­லும் பெண்­கள் மிக­வும் உத­வி­க­ர­மாக இருப்­பர். குறிப்­பாக ஜூன் 3,4 அவர்­க­ளால் அதிக நன்மை ஏற்­ப­டும்.

தொழில், வியா­பா­ரத்­தில் மாத­பிற்­ப­கு­தி­யில் நல்ல வளர்ச்சி காண­லாம். இருப்­பி­னும் போட்­டி­யா­ளர்­க­ளின் இடை­யூ­று­களை உடைத்­தெ­றி­வீர்­கள். ப।திய வியா­பா­ரம் ஓர­ளவு அனு­கூ­லம் தரும். ஜூன் 15,16,30 ஜூலை 1,2,12,13,14ல் சந்­தி­ர­னால் தடை­கள் வர­லாம். சில­ருக்கு தொழில், வணி­கர் சங்­கங்­க­ளில் பதவி, புகழ், பாராட்டு கிடைக்­கும்.

பணி­யா­ளர்­கள் அதி­க­மாக உழைக்க வேண்­டி­யி­ருக்­கும். மேல் அதி­கா­ரி­க­ளி­டம் அனு­ச­ரித்து போக­வும். அர­சி­யல்­வா­தி­கள் பலனை எதிர்­பா­ரா­மல் உழைக்க வேண்­டி­யது இருக்­கும்.

மாண­வர்­கள், நண்­பர்­க­ளு­டன் வெளி­யில் செல்­லும் போது, சட்­டத்­துக்கு உட்­பட்டு நடக்க வேண்­டும். இல்­லா­விட்­டால் தேவை­யற்ற கெட்ட பெயர் எடு­கக் வாய்ப்பு உண்டு. விவ­சா­யி­கள் நல்ல வரு­மா­னம் பெறு­வர். பழம், பயறு வகை மூலம் அதிக லாபம் கிடைக்­கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்­தி­ருக்க வேண்­டும்.

பெண்­கள் ராகு­வால் சிறப்­பான நிலை­யில்

இருப்­பர். பிள்­ளை­க­ளால் மகிழ்ச்­சி­யும் பெரு­மை­யும் கிடைக்­கும். வெளி­யூர் வாசம் இருக்­கும். உங்­கள் செல்­வாக்­குக்கு பாதிப்பு ஏற்­ப­ட­லாம். சற்று ஒதுங்கி இருக்­க­வும். ஜூலை 8, 9ல் புத்­தாடை, நகை­கள் வாங்­க­லாம். பெற்­றோர் வீட்­டில் இருந்து பொருட்­கள் வரப்­பெ­ற­லாம்.

ஜூன் 20, 21ம் தேதி­க­ளும் சிறப்­பான நாட்­க­ளாக அமை­யும். விருந்து, விழா என சென்று வரு­வீர்­கள். சகோ­த­ரர்­கள் மூலம் பண உதவி கிடைக்­கும். செவ்­வா­யால் அண்டை வீட்­டார்­க­ளின் தொல்லை ஏற்­ப­டும். சில­ரது வீட்­டில் பொருட்­கள் களவு போக வாய்ப்பு உண்டு.

பரி­கா­ரம்

* ராகு காலத்­தில் துர்க்கை வழி­பாடு

* வெள்­ளி­யன்று சுக்­கிர­ னுக்கு அர்ச்­சனை

* சனிக்­கி­ழமை பெரு­மா­ளுக்கு நெய் தீபம்

நல்ல நாள் : ஜூன் 17, 18, 19, 20, 21, 26, 27, 30, 29

ஜூலை 3, 4, 8, 9, 7, 15, 16

கவன நாள் : ஜூன் 22, 23 சந்­தி­ராஷ்­ட­மம்.

அதிர்ஷ்ட எண் : 4, 7  

நிறம் : பச்சை, நீலம்.

விருச்சிகம்

குடும்பத்தில் குதூகலம்

உங்­கள் ராசிக்கு 11ம் இடத்­தில் இருக்­கும் குரு­வால் நன்மை உண்­டா­கும். 8ம் இடத்­தில்  இருக்­கும் புதன் ஜூன் 28ம் தேதி வரை நன்மை தர காத்­தி­ருக்­கி­றார். அதன் பின் அவர் கட­கத்­திற்கு வரு­வ­தால் நன்மை சற்று குறை­யும்.

குரு பக­வா­னால் பொரு­ளா­தா­ரம் மேம்­ப­டும். பணி­யா­ளர்­க­ளுக்கு புதிய பதவி கிடைக்­கும். குடும்ப வாழ்­வில் குதூ­க­லம் நிறைந்தி ­ருக்­கும். பெண்­கள் மிக உறு­து­ணை­யாக செயல்­ப­டு­வர். பிரிந்த குடும்­பம் மீண்­டும் ஒன்று சேரும்.

புது­மண தம்­ப­தி­ய­ருக்கு குழந்தை பாக்­கி­யம் ஏற்­ப­டும். புதிய முயற்­சி­யில் வெற்றி உண்­டா­கும். பிள்­ளை­க­ளின் செயல்­பாட்­டால் பெருமை கொள்­வீர்­கள். ஜூன் 28க்கு .பிறகு மன­வே­தனை ஏற்­ப­ட­லாம். எதி­லும் பொறு­மையை கடை­பி­டிப்­பது நல்­லது. விட்டு கொடுத்து போக­வும். அறி­மு­கம் இல்­லா­த­வர்­க­ளி­டம் எச்­ச­ரிக்­கை­யு­டன் பழ­க­வும்.

தொழில் வியா­பா­ரத்­தில் கடி­ன­மாக உழைக்க வேண்­டி­ய­தி­ருக்­கும். லாபம் சீராக இருக்­கும். எனவே வரவு, செலவு கணக்கை சரி­யாக வைத்­துக் கொள்­ள­வும். எதி­ரி­கள் மீது ஒரு கண் வைத்­தி­ருப்­பது நல்­லது. தொழில் ரீதி­யான பய­ணம் அடிக்­கடி செல்ல நேரி­டும். ஜூலை 3,4,8,9ல் சந்­தி­ர­னால் சிறு தடை­கள் ஏற்­ப­ட­லாம். ஜூன் 20, 21 எதிர்­பா­ராத வகை­யில் பணம் கிடைக்க பெறு­வர்.

பணி­யா­ளர்­கள் பணி­யி­டத்­தில் மதிப்­பு­டன் நடத்­தப்­ப­டு­வர். சில­ருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்­புண்டு. அதி­கா­ரி­க­ளின் கருணை பார்வை கிடைக்­கும் எதிர்­பார்த்த கோரிக் கை ஒவ்­வொன்­றாக நிறை­வே­றும். ஜூன் 28க்கு பிறகு திற­மைக்கு ஏற்ற பொறுப்பு கிடைக்­கா­மல் போக­லாம். சில­ருக்கு விரும்­பாத இட­மாற்­றம் கிடைக்­க­லாம். அரசு ஊழி­யர்­கள் வேலை­யில் அதிக கவ­ன­மு­டன் இருக்­க­வும். பணி தவிர்த்த பிற விஷ­யங்­க­ளில் ஈடு­பட வேண்­டாம். ஜூன் 28,29ல்  எதிர்­பா­ராத நன்மை உண்­டா­கும்.

கலை­ஞர்­கள் மறை­முக போட்­டியை சந்­திப்­பர். விடா­மு­யற்சி இருந்­தால் மட்­டுமே புதிய ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­கும். எதிர்­பார்த்த புகழ், பாராட்டு கிடைக்­காது. அர­சி­யல்­வா­தி­கள் சீரான நிலை­யில் காணப்­ப­டு­வர். தொண்­டர்­க­ளின் நல­னுக்­காக  பணம் செல­வ­ழிக்க நேரி­டும். தலை­மை­யின் கருத்­துக்கு மதிப்­ப­ளிப்­பது நல்­லது.

மாண­வர்­க­ளுக்கு ஜூன் 28 வரை புதன் சாத­க­மாக இருப்­ப­தால் கல்­வி­யில் வளர்ச்சி உண்­டா­கும். அதன் பின் விடா­மு­யற்சி தேவைப்­ப­டும். ஆசி­யர்­க­ளின் வழி­காட்டு தலை ஏற்­பது முன்­னேற்­றம்  தரும். போட்­டி­யில் வெற்றி பெற கடின உழைப்பு தேவைப்­ப­டும்.

விவ­சா­யி­கள் மானா­வாரி பயிர்­கள் மூலம் நல்ல மக­சூல் காண்­பர். கால்­நடை வளர்ப்­பின் மூலம் வரு­மா­னம் அதி­க­ரிக்­கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்­தி­ருக்க நேரி­டும்.

பெண்­க­ளால் குடும்­பம் சிறந்து விளங்­கும். கண­வர் மற்­றும் குடும்­பத்­தா­ரி­டம் விட்டு கொடுத்து போக­வும். பிள்­ளை­க­ளின் வளர்ச்­சி­காக பாடு­ப­டு­வர். தொழில் புரி­யும் பெண்­கள் சுமா­ரான லாபம் கிடைக்­கப் பெறு­வர். சில­ருக்கு இட, பணி மாற்­றம் ஏற்­பட வாய்­புண்டு. ஜூன் 22, 23 எதிர்­பார்ப்பு இனிதே நிறை­வே­றும்.

பரி­கா­ரம்

*  சனி­யன்று ஆஞ்­ச­நேய ருக்கு துளசி அர்ச்­சனை

* வெள்­ளி­யன்று மகா

லட்­சு­மிக்கு நெய்­தீ­பம்

* புதன்­கி­ழ­மை­யில் பசு

­­வுக்கு கீரை கொடுத்­தல்

நல்ல நாள் : ஜூன் 20, 21, 22, 23, 28, 29,30.

ஜூலை 1, 2, 5, 6, 7, 10, 11

கவன நாள் : ஜூன் 24, 25 சந்­தி­ராஷ்­ட­மம்.

அதிர்ஷ்ட எண் : 4, 7  

நிறம் : பச்சை, நீலம்.

தனுசு

ஆடம்பர வசதி கூடும்

இந்த  மாதம் முழு­வ­தும் கேது, சுக்­கி­ரன் நன்­மை­களை வழங்­கு­வர். புதன் ஜூன் 28க்கு பிறகு நற்­ப­லன் கொடுப்­பார். மன­தில் பக்தி எண்­ணம் மேம்­ப­டும். எடுத்த முயற்சி அனைத்­தி­லும் வெற்றி காண­லாம். பொரு­ளா­தார வளம்

சிறக்­கும். கேது, சுக்­கி­ர­ னால் ஆடம்­பர வச­தி­கள் பெரு­கும். சூரி­யன், செவ்­வா­யால் வாழ்­வில் சில தடை­கள் குறுக்­கி­ட­லாம். வீண் அலைச்­சல் ஏற்­ப­ட­லாம். வயிறு தொடர்­பான உபா­தை­கள் வர­லாம்.

குடும்­பத்­தில் பெரி­யோர் ஆத­ர­வும், ஆலோ­ச­னை­யும் கிடைக்­கும். நண்­பர்­கள் உத­வி­க­ர­மாக செயல்­ப­டு­வர். பொன், பொருள் சேரும். வீடு, வாகன வகை­யில்    புதிய மாற்­றங்­களை செய்­வீர்­கள். திரு­ம­ணம் போன்ற சுப­நி­கழ்ச்­சி­க­ளில் அடிக்­கடி கலந்து கொள்­வீர்­கள். ஜூன் 28 வரை புதன் சாத­க­மற்ற இடத்­தில் இருப்­ப­தால், கண­வன், மனைவி இடையே அவ்­வப்­போது கருத்­து­வே­று­பாடு ஏற்­ப­ட­லாம். ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் விட்­டு­கொ­டுத்து போக­வும். அதன் பிறகு நிலைமை சீரா­கும். சில­ருக்கு மருத்­துவ சிகிச்சை செய்ய நேரி­ட­லாம். செவ்­வா­யால் பித்­தம், மயக்­கம் பிரச்னை ஏற்­ப­ட­லாம். அலைச்­ச­லால் உடல் அச­திக்கு ஆளாக வாய்ப்­புண்டு.

தொழில், வியா­பா­ரத்­தில் கூட்­டா­ளி­க­ளி­டையே ஒற்­று மை மேலோங்­கும். தொழில் ரீதி­யான பய­ணம் சென்று ஆதா­யத்­து­டன் திரும்­பு­வீர்­கள். ஜூன் 28க்கு பிறகு புதிய வியா­பார முயற்சி வெற்றி தரும்.

கடந்த கால முயற்­சி­யின் பலன் தற்­போது கிடைக்­கும். சக தொழி­ல­தி­பர்­க­ளின் மத்­தி­யில் செல்­வாக்கு உய­ரும். சந்­தி­ர­னால் தடை­களை சந்­திக்க வேண்­டி­ய­தி­ருக்­கும். எதிர்­பா­ராத வகை­யில் பணம் கிடைக்­கும்.

பணி­யா­ளர்­கள் முயற்­சி த்­தால் மட்­டுமே கோரிக்கை நிறை­வே­றும். சில­ருக்கு பதவி உயர்வு கிடைக்க யோக­முண்டு. கடந்த காலத்­தில் இருந்த பணிச்­சுமை குறை­யும். சில­ருக்கு விரும்­பிய இட, பணி மாற்­றம் கிடைக்­கும். மேல­தி­கா­ரி­கள் அனு­ச­ர­ணை­யு­டன் செயல்­ப­டு­வர். பணி­யி­டத்­தில் செல்­வாக்கு கூடும்.

கலை­ஞர்­கள் புதிய ஒப்­பந்­தம் கிடைக்க பெபுறு வரு­மா­னம் காண்­பர். பெண்­கள் மிக­வும் ஆத­ர­வு­டன் இருப்­பர். விருது, பாராட்டு கிடைக்க வாய்ப்­புண்டு. அர­சி­யல்­வா­தி­கள், பொது­நல சேவ­கர்­கள் நற்­பெ­ய­ரு­டன், பதவி உயர்­வும் கிடைக்­கப் பெறு­வர். மக்­கள் மத்­தி­யில் செல்­வாக்கு உய­ரும்.

மாண­வர்­கள் புதன் சாத­க­மான இடத்­தில் இல்­லா­த­தால் படிப்­பில் விடா­மு­யற்சி தேவைப்­ப­டும். போட்­டி­க­ளில் வெற்றி காண்­பது அரிது. ஜூன் 28க்கு பிறகு நல்ல மதிப்­பெண் கிடைக்க பெறு­வர். பெற்­றோர், ஆசி­ரி­யர்­க­ளின் மத்­தி­யில் நற்­பெ­யர் உண்­டா­கும்.

விவ­சா­யி­க­ளுக்கு நெல், சோளம் போன்ற பயிர்­க­ளில் நல்ல மக­சூல் கிடைக்­கும்.கால்­நடை வளர்ப்­பின் மூலம் கூடு­தல் வரு­மா­னம் கிடைக்­காது. வழக்கு விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும்.

பெண்­க­ளால் குடும்­பம் சிறந்து விளங்­கும். குடும்­பத்­தா­ரி­டம் விட்டு கொடுத்து போக­வும். ஜூன் 28க்கு பிறகு திரு­ம­ணம் போன்ற சுப­வி­ஷ­யங்­க­ளில் நல்ல முடிவு கிடைக்­கும்.பிள்­ளை­க­ளின் வளர்ச்­சிக்கு துணை நிற்­பீர்­கள். வேலை, தொழில் செய்­யும் பெண்­கள் சீரான வளர்ச்சி காண்­பர்.

பரி­கா­ரம்

* சனியன்று பெருமாளு க்கு துளசி அர்ச்சனை

* தினமும் காலையில் சூரிய தரிசனம்

* சதுர்த்தியன்று விநாயக ருக்கு விளக்கு

நல்ல நாள் : ஜூன் 15, 16, 22, 23, 24, 25, 30 – ஜூலை 1, 2, 3, 4, 8, 9, 12, 13, 14

கவன நாள் : ஜூன் 26, 27 சந்­தி­ராஷ்­ட­மம்.

அதிர்ஷ்ட எண் : 7, 9  

நிறம் : வெள்ளை, சிவப்பு.

மகரம்

பணப்புழகம் அதிகரிக்கும்

இந்த மாதம் குரு, சுக்­கி­ரன், சனி, செவ்­வாய், சூரி­யன் சாத­க­மாக இருந்து சிறப்­பான பலன்  தரு­வர். புத­னால் ஜூன் 28 வரை நற்­ப­லன் உண்­டா­கும். 9ம் இடத்­தில் இருக்­கும் குரு­வால் மன­தில் மகிழ்ச்சி அதி­க­ரிக்­கும். உற்­சா­க­மு­டன் பணி­யில் ஈடு­ப­டு­வீர்­கள்.

நினைத்­ததை வெற்­றி­க­ர­மாக செய்து முடிப்­பீர்­கள். கையில் பணப்­பு­ழக்­கம் அதி­க­ரிக்­கும். தேவை­கள் தாராள செல­வில் பூர்த்­தி­யா ­கும். குடும்­பத்­தில் இருந்து வந்த பின்­ன­டைவு மறை­யும். தம்­பதி இடையே ஒன்­றுமை மேம்­ப­டும். உற­வி­னர்­கள் உத­வி­க­ர­மாக செயல் ­படு­வர். புரிந்து கொள்­ளா­மல் இருந்­த­வர்­கள் கூட உங்­கள் மேன்மை அறிந்து சர­ண­டை­யும் சூழ்­நிலை உரு­வா­கும்.

குடும்ப வாழ்க்கை மேம்­ப­டும். அபார ஆற்­றல் சர­ண­டை­யும் சூழ்­நிலை உரு­வா­கும். தடை­பட்ட திரு­ம­ணம் விம­ரி­சை­யாக நடக்க வாய்ப்­புண்டு.

குடும்ப வாழ்க்கை மேம்­ப­டும்.  ஆடை, ஆப­ர­ணம் வாங்­க­லாம். புத­னால் புதிய முயற்சி வெற்றி பெறும். வீடு, மனை, வாகன வகை­யில் நவீன மாற்­றம் செய்­வீர்­கள். சில­ருக்கு புதிய வீடு, வாக­னம் வாங்க யோகம் உண்­டா­கும். ஜூன் 28க்கு பிறகு குடும்­பத்­தில் குழப்­பம் நில­வும். கண­வன், மனைவி இடையே கருத்து வேறு­பாடு ஏற்­ப­ட­லாம். ஒரு­வ­ருக்கு ஒரு­வர் விட்­டுக் கொடுத்து போக­வும். ஜூலை 10, 11ல் பெண்­க­ளால் நன்மை கிடைக்­கும்.

தொழில், வியா­பா­ரத்­தில் அமோக லாபம் கிடைக்­கு­ம். சேமிப்பு அதி­க­ரிக்­கும். சக தொழி­ல­தி­பர்­க­ளின் மத்­தி­யில் செல்­வாக்கு அதி­க­ரிக்­கும். பகை­வ­ரால் ஏற்­பட்ட இடை­யூறு மறை­யும். கூட்­டா­ளி­க­ளி­டையே ஒற்­றுமை மேம்­ப­டும்.

பணி­யா­ளர்­க­ளுக்கு பணி­யி­டத்­தில் செல்­வாக்கு அதி­க­ரிக்­கும். நண்­பர்­கள் மற்­றும்  சக ஊழி­யர்­கள் மிக­வும் உத­வி­க­ர­மாக செயல்­ப­டு­வர். எதிர்­பார்த்த சலுகை ஒவ்­வொன்­றாக கிடைக்­கும். போலீஸ், ராணு­வத்­தில் பணி­பு­ரி­ப­வர்­கள் உயர்ந்த நிலையை அடை­வர். சில­ருக்கு புதிய பதவி கிடைக்க வாய்ப்­புண்டு. ஜூன் 28க்கு பிறகு புதன் 7ம் இடத்­தில் இருப்­ப­தால் வேலை­யில் பொறு­மை­யும், நிதா­ன­மும் தேவை.

கலை­ஞர்­க­ளுக்கு தொழி­லில் குறுக்­கிட்ட பிரச்னை அடி­யோடு வில­கும். சக பெண் கலை­ஞர்­கள் உத­வி­க­ர­மாக செயல்­ப­டு­வர். புதிய ஒப்­பந்­தம் எளி­தில் கையெ­ழுத்­தா­கும்.

மாண­வர்­க­ளுக்கு புதன் சாத­க­மாக காணப்­ப­டு­வ­தால் கல்­வி­யில் முன்­னேற்­றம் உண்­டா­கும். கல்­வி­யு­டன் கலைத்­து­றை­யி­லும் ஆர்­வம் அதி­க­ரிக்­கும். போட்­டி­­யில் பங்­கேற்று வெற்றி பெற சற்று முயற்சி தேவைப்­ப­டும். நண்­பர்­க­ளி­டம் எதிர்­பார்த்த உதவி கிடைக்­கும். ஆசி­ரி­யர்­கள் ஆலோ­சனை வளர்ச்­சிக்கு துணை நிற்­கும்.

விவ­சா­யி­க­ளுக்கு எதிர்­பார்­தத்தை விட அதிக மக­சூல் கிடைக்­கும் விளை­பொ­ருளை அதிக விலைக்கு விற்று லாபம் காண்­பர்.

பெண்­கள் கண­வ­ரின் அன்­பை­யும், ஆத­ர­வை­யும் பெறு­வர். வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். பிள்­ளை­கள் நற்­செ­ய­லில் ஈடு­பட்டு உங்­க­ளுக்கு பெருமை சேர்ப்­பர். சில­ருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்­புண்டு. சுய­தொ­ழில் செய்து வரும் பெண்­க­ளுக்கு வரு­மா­னம் அதி­க­ரிக்­கும்.

பரி­கா­ரம்

* சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை

* வெள்ளியன்று ராகுகா லத்தில் துர்கைக்கு விளக்கு

* தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவர் வழிபாடு

நல்ல நாள் : ஜூன் 17, 18, 19, 24, 25, 26, 27 – ஜூலை 3, 4, 5, 6, 7, 10, 15, 16

கவன நாள் : ஜூன் 28, 29 சந்­தி­ராஷ்­ட­மம்.

அதிர்ஷ்ட எண் : 2, 3, 4  

நிறம் : சிவப்பு, மஞ்சள்.

கும்பம்

வீடு வாங்க யோகம்

இந்த மாதம் சுக்­கி­ரன் 3ம் இடத்­தில் இருப்­பது மிக­வும் உயர்­வான நிலை. புதன் ஜூலை 29க்கு பிறகு நற்­ப­லனை வாரி வழங்­கு­வார். செவ்­வாய் ஜூலை 12க்கு பிறகு சுப பலனை கொடுப்­பார். சமூ­கத்­தில் செல்­வாக்கு மேம்­ப­டும். கையில் பணப்­பு­ழக்­கம் அதி­க­ரிக்­கும்.  குடும்ப தேவை குறை­வின்றி பூர்த்­தி­யா­கும். ஆடம்­பர வசதி கிடைக்க பெறு­வீர்­கள். எல்லா வகை­யி­லும் சிறப்­பான மாத­மாக அமை­யும்.

குடும்ப வாழ்­வில்  இனிமை உண்­டா­கும். அடிக்­கடி விருந்து, விழா என சென்று வர வாய்ப்­புண்டு. சுப விஷ­யத்­தில் எதிர்­பார்த்த நல்ல முடிவு கிடைக்­கும். புதிய முயற்­சி­யில் வெற்றி கிடைக்­கும். கண­வன், மனைவி இடையே ஒற்­றுமை மேலோங்­கும்.

பிள்­ளை­க­ளின் செயல்­பாடு பெருமை அளிக்­கும். கல்வி,  வேலை­வாய்ப்­பில் நல்ல முன்­னேற்­றம் காண்­பர். வீடு, வாகன வகை­யில் நவீன மாற்­றம் செய்­வீர்­கள். புதி­தாக வீடு, மனை, வாக­னம் வாங்­க­வும் யோகம் உண்­டா­கும். ஜூன் 15, 16, ஜூலை 12, 13, 16ல் நன்மை அதி­க­ரிக்­கும். கட­னாக கொடுத்த பணம் முயற்­சி­யின்றி கிடைக்­கும். ஜூன் 20, 21ல் புத்­தாடை, அணி­க­லன் வாங்­க­லாம்.  செவ்­வா­யால் உடல்­நிலை லேசாக பாதிக்­கப்­ப­ட­லாம். அலைச்­ச­லால் உடல் அச­திக்கு ஆளாக நேரி­ட­லாம்.

தொழில், வியா­பா­ரத்­தில் லாபம் சிறப்­பாக இருக்­கும். அர­சாங்க வகை­யில் எதிர்­பார்த்த சலுகை கிடைக்­கும். தொழி­லா­ளர்­க­ளின் ஒத்­து­ழைப்பு வளர்ச்­சிக்கு துணை நிற்­கும்.

பணி­யா­ளர்­கள் சுதந்­திர மனப்­பான்­மை­யு­டன் செயல்­ப­டு­வர். பணி விஷ­ய­மாக டிக்­கடி வெளி­யூர் செல்ல நேரி­டும். ஜூன் 28க்கு பிறகு சக ஊழி­யர்­கள் மிக­வும் ஆத­ர­வு­டன் இருப்­பர். இட­மாற்ற பீதி மறை­யும் சில­ருக்கு  பதவி உயர்வு கிடைக்க வாய்ப்­புண்டு. பணி­யி­டத்­தில் செல்­வாக்கு அதி­க­ரிக்­கும். ஜூலை 12க்கு பிறகு போலீஸ், ராணு­வத்­தில் பணி­பு­ரி­ப­வர்­கள் உயர்ந்த நிலையை அடை­வர்.

கலை­ஞர்­கள் புதிய ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்டு வரு­மா­னம் காண்­பர். ரசி­கர்­க­ளின் மத்­தி­யில் செல்­வாக்கு அதி­க­ரிக்­கும். அர­சி­டம் இருந்து விருது, பாராட்டு போன்­றவை கிடைக்­கும். அர­சி­யல்­வா­தி­கள், பொது­நல சேவ­கர்­கள் ஜூலை 12க்கு பிறகு நற்­ப­லன் காண­லாம். எதிர்­பார்த்த பதவி கிடைக்க யேக­முண்டு. மக்­கள் மத்­தி­யில் நற்­பெ­யர் உண்­டா­கும். அர­ச­யில் ரீதி­யான பய­ணங்­கள் வெற்றி பெறும்.

மாண­வர்­க­ளுக்கு ஜூன் 28க்கு பிறகு விரும்­பிய கல்வி நிறு­வ­னத்­தில் சேரும் வாய்ப்பு கிடைக்­கும். ஆசி­ரி­யர்­க­ளின் ஆலோ­சனை வளர்ச்­சிக்கு வழி­வ­குக்­க­கும். போட்­டி­யில் பங்­கேற்று வெற்றி காண்­பர். விவ­சா­யி­க­ளுக்கு பயறு வகை­கள், நெல், கேழ்­வ­ரகு, கரும்பு, பனைத்­தொ­ழில், பழ­வ­கை­கள் போன்­ற­வற்­றில் நல்ல மக­சூல் கிடைக்­கும். கல்­நடை வளர்ப்­பின் மூலம் வரு­மா­னம் பெரு­கும்.

பெண்­கள் குடும்­பத்­தா­ரி­டம் விட்டு கொடுத்து போவது நல்­லது.ஜூன் 28க்கு பிறகு கண­வன், மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்­கும். பிள்­ளை­க­ளின் வளர்ச்சி கண்டு பெரு­மி­தம் கொள்­வர். வேலைக்கு செல்­லும் பெண்­கள் சிறப்­பான பலனை காண்­பர்.

பரி­கா­ரம்

* சனியன்று நவக்கிரக சன்னதியில் என் தீபம்

* சுவாதியன்று நரசிம்ம ருக்கு அர்ச்சனை

* ஞாயிறன்று ராகு காலத்தில் பைரவர்வழிபாடு

நல்ல நாள் : ஜூன் 15, 16, 20, 21, 26, 27, 28 – ஜூலை 5, 6, 7, 8, 9, 12, 13, 14

கவன நாள் : ஜூன் 30, ஜூலை 1, 2 சந்­தி­ராஷ்­ட­மம்.

அதிர்ஷ்ட எண் : 6, 7 –  

நிறம் : வெள்ளை, பச்சை.

மீனம்

பெண்களால் நன்மை

இந்த மாதம் குரு, சுக்­கி­ரன், ராகு நன்மை தர காத்­தி­ருக்­கின்­ற­னர். புதன் ஜூன் 28 வரை நன்­மையை வாரி வழங்­கு­வார். குரு பக­வான் உங்­கள் ராசிக்கு 7ம் இடத்­தில் இருப்­ப­தால் குடும்­பத்­தில் மகிழ்ச்சி அதி­க­ரிக்­கும். சுப­நி­கழ்ச்சி சிறப்­பாக நடந்­தே­றும். சமூ­கத்­தில் செல்­வாக்கு மேம்­ப­டும். கையில் பணப்­பு­ழக்­கம் அதி­க­ரிக்­கும். தேவை பூர்த்­தி­யா­கும். ஆடம்­பர வச­தி­கள் பெரு­கும். பணி­யா­ளர்­க­ளுக்கு பதவி உயர்வு உண்­டா­கும். புதிய முயற்­சி­யில் தடை வந்­தா­லும் அதை முறி­ய­டித்து விடு­வீர்­கள்.

சமூ­கத்­தில் மரி­யாதை கூடும். 15, 16ல் பெண்­க­ளால் நன்மை உண்­டா­கும். தம்­ப­தி­யி­டையே அன்பு நீடிக்­கும். ஜூலை 10, 11 உற­வி­னர்­கள் வரு­கை­யும், அவர்­க­ளால் நன்­மை­யும் கிடைக்­கும். உடல் நலம் பாதிப்பு வர­லாம். சில­ருக்கு மருத்­துவ சிகிச்­சை­யும் தேவைப்­ப­ட­லாம். பய­ணத்­தின் போது சற்று கவ­னம் தேவை.

தொழி­ல­தி­பர், வியா­பா­ரி­க­ளுக்கு அர­சாங்க வகை­யில் சலுகை கிடைக்­கு­ம் வங்கி கடன் மூலம் தொழிலை விரி­வு­ ப­டுத்­த­லாம். லாபம் படிப்­ப­டி­யாக அதி­க­ரிக்­கும். கூட்­டா­ளி­க­ளி­டையே ஒற்­றுமை மேலோங்­கும்.

பணி­யா­ளர்­கள் மாத முற்­ப­கு­தி­யில் சிறப்­பான முன்­னேற்­றம் காண்­பர். கோரிக்­கை­கள் ஒவ்­வொன்­றாக நிறை­வே­றும். திற­மையை வெளிப்­ப­டுத்தி பரிசு, பாராட்டு பெறு­வீர்­கள். சக ஊழி­யர்­க­ளின் ஒத்­து­ழைப்பு சிறப்­பாக அமை­யும். ஜூன் 28க்கு பிறகு வேலை நிமித்­த­மாக குடும்­பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரி­ட­லாம். சிலர் திடீர் இட­மாற்­றத்தை சந்­திக்­க­லாம்.

கலை­ஞர்­கள் நல்ல வளர்ச்சி பெறு­வர். புதிய ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­கும். சிலர் அர­சி­டம் இருந்து விருது, பாராட்டு கிடைக்க பெறு­வர். தொழில் ரீதி­யாக அடிக்­கடி வெளி­யூர் செல்ல நேரி­டும். அர­சி­யல்­வா­தி­கள் சுமா­ரான நிலை­யில் இருப்­பர். தொண்­டர் வகை­யில் திடீர் செலவு ஏற்­ப­ட­லாம். தலை­மை­யின் சொல்­லுக்கு கட்­டுப்­ப­டு­வது நன்­மை­ய­ளிக்­கும்.

மாண­வர்­கள் கல்­வி­யில் முன்­னேற்­றம் காண்­பர். கடந்த காலத்­தில் இருந்த பின் தங்­கிய நிலை இனி இருக்­காது. ஆசி­ரி­யர்­க­ளின் ஆலோ­சனை வளர்ச்­சிக்கு துணை நிற்­கும். கலை, விளை­யாட்டு போட்­டி­க­ளில் பங்­கேற்று வெற்றி காண்­பர். நண்­பர்­க­ளி­டம் எதிர்­பார்த்த உதவி கிடைக்­கும்.

விவ­சா­யி­க­ளுக்கு  எதிர்­பார்த்த மக­சூல் கிடைக்­கும். அதிக பணம் தேவைப்­ப­டும்.  பணப்­ப­யிர்­களை  தவிர்ப்­பது நல்­லது. கால்­நடை வளர்ப்­பில் மித­மான லாபம் கிடைக்­கும். வழக்கு, விவ­கா­ரத்­தில் மெத்­த­ன­மாக இருக்க வேண்­டாம். நிலப் பிரச்­னைக்கு பேச்சு வார்த்தை மூலம் சுமூ­கத்­தீர்வு உண்­டா­கும்.

பெண்­க­ளுக்கு குடும்­பத்­தி­ன­ரின் அன்­பும், ஆத­ர­வும் கிடைக்­கும். பிள்­ளை­க­ளின் வளர்ச்­சிக்கு துணை நிற்­பீர்­கள். ஆன்­மிக நிகழ்ச்­சி­க­ளில் விரும்­ப­மு­டன் பங்­கேற்­பர். வேலைக்கு செல்­லும் பெண்­கள் நல்ல வளர்ச்சி காண்­பர். அதி­கா­ரி­க­ளின் ஆத­ரவு கிடைக்­கும். எதிர்­பார்த்த சலுகை விரை­வில் வந்து சேரும். ஜூன் 30, ஜூலை 1, 2 ஆகிய தேதி­கள் குதூ­க­ல­மான நாட்­க­ளாக அமை­யும். ஜூன் 22, 23ல் புத்­தாடை, அணி­க­லன்­கள் வாங்­க­லாம். சகோ­த­ரர்­க­ளி­டம் எதிர்­பார்த்த உதவி கிடைக்­கும்.

பரி­கா­ரம்

* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்

* செவ்வாயன்று முருக னுக்கு பாலாபிஷேகம்

* ஞாயிறன்று ஏழைக ளுக்கு கோதுமை தானம்

நல்ல நாள் : ஜூன் 17, 18, 19, 22, 23, 28, 29, 30 – ஜூலை 1, 8, 9, 10, 11, 15,16

கவன நாள் : ஜூலை 2, 3 சந்­தி­ராஷ்­ட­மம்.

அதிர்ஷ்ட எண் : 1, 6  

நிறம் : வெள்ளை, மஞ்சள்.