இன்றைய ராசி பலன் (26-09-2017)
மேஷம்
செப்டம்பர் 26, 2017

இன்று உங்களுக்கு பொருளாதார சூழ்நிலைகள் லாபகரமாக இருக்கும். தொழில் ரீதியான சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும். மேலதிகாரிகளின் அனுசரணை இருக்கும். தேவையற்ற விஷயங்களில் மனக்குழப்பம் வரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது உத்தமம்.

ரிஷபம்
செப்டம்பர் 26, 2017

இன்று உங்களுக்கு பணவரவுகள் பிரச்னைகள் தீரும் வகையில் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். செய்யும் தொழிலில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். எதிர்ப்புகள் விலகும். உறவுகள் மேம்படும்.

மிதுனம்
செப்டம்பர் 26, 2017

இன்று உங்கள் குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பயண அலைச்சல் மிகுந்திருக்கும். எதிர்பாராத செலவினங்கள் வரும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். உறவுகள், நண்பர்கள் உதவி ஒத்தாசை பயனுள்ளதாக இருக்கும். முன்னெச்சரிக்கை தேவைப்படும்.

கடகம்
செப்டம்பர் 26, 2017

இன்று பொருளாதார சூழ்நிலைகள் திருப்திகரமாக இருக்கும். சவாலான பணிகளை சாதுார்யமாக செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்யத்தில் கவனம் தேவைப்படும். பயண அலைச்சல் சிரமம் தரும். கொடுக்கல் வாங்கலில் முன்னெச்சரிக்கை அவசியம் தேவை.

சிம்மம்
செப்டம்பர் 26, 2017

இன்று உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் சுமாராகவே இருக்கும். எதிர்பாராத செலவினங்கள் சிரமம் தரும். குடும்பத்தேவைகள் அதிகரிக்கும். கடன் வாங்கி சமாளிப்பீர்கள். தொழில் ரீதியான சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும்.

கன்னி
செப்டம்பர் 26, 2017

இன்று உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் தாராளமாக இருக்கும். புதிய பொருள் சேர்க்கை குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுகபோஜனம், சுகஜீவனம் மகிழ்ச்சி தரும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் கைகூடும்.

துலாம்
செப்டம்பர் 26, 2017

இன்று எதிர்பாராத நன்மைகள் மகிழ்ச்சி தரும். பயண அலைச்சல் மிகுந்திருக்கும். திட்டமிட்டபடி செயல்படுவீர்கள். கடன் சுமைகள் குறையும். தேக ஆரோக்யத்தில் சிறுசிறு தொல்லை வரும். முன்கோபம், வாக்குவாதத்தை தவிர்ப்பது நலம்.

விருச்சிகம்
செப்டம்பர் 26, 2017

இன்று உங்கள் புதிய முயற்சிகள் அனுகூலமாகும். உறவினர்கள், நண்பர்கள் உதவி, ஒத்தாசை இருக்கும். குழந்தைகள் பராமரிப்பு சிரமங்கள் இருக்கும். வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். இறையருள் நன்மை பயக்கும்.

தனுசு
செப்டம்பர் 26, 2017

இன்று உங்களுக்கு அயனசயனபோகம் மிகுந்திருக்கும். கண் உபாதை சிரமம் தரும். குடும்பத்திற்குள் அனுசரணையான போக்கு மகிழ்ச்சி தரும். ஆன்மிக ஈடுபாடு ஆறுதல் தரும். நண்பர்கள் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.

மகரம்
செப்டம்பர் 26, 2017

இன்று பொருளாதார சூழ்நிலை எதிர்பாராத செலவுகள் நெருக்கடி தரும். சுபகாரிய முயற்சி அனுகூலமாகும். விருந்தினர் வருகை குடும்ப மகிழ்ச்சி பெருகும். செய்யும் தொழில் ரீதியான சூழ்நிலை முன்னேற்றம் பெறும்.

கும்பம்
செப்டம்பர் 26, 2017

இன்று நீங்கள் எதிர்பார்த்த விஷயம் அனுகூலமாகும். வியாபார ரீதியான சூழ்நிலை லாபகரமாக இருக்கும். தேக ஆரோக்யத்தில் சிறுசிறு தொல்லை வரும். முன்னெச்சரிக்கை தேவை. எதிர்ப்புகளை சமாளிக்கும் வகையில் செயல்படுவீர்கள்.

மீனம்
செப்டம்பர் 26, 2017

இன்று குழந்தைகளால் குடும்ப மகிழ்ச்சி பெருகும். ஆடம்பர செலவினங்கள் இருக்கும். செய்யும் தொழிலில் கடின உழைப்புக்கு ஏற்ப நற்பலன்கள் இருக்கும். ஆன்மிக ஈடுபாடு இறையருள் மன நிம்மதி தரும்.