உத்தர பிரதேச மருத்துவமனைகளில் 2,000 மருத்துவர்கள் விரைவில் நியமனம்

பதிவு செய்த நாள் : 13 செப்டம்பர் 2017 21:04

லக்னோ

உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் இன்று தெரிவித்தார்.

”கடந்த பல வருடங்களாக உத்தரப் பிரதேச மாநில அரசு மருத்துவமனைகளில் 7,328 மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலி பணியிடங்களில் மருத்துவர்களை நியமனம் செய்யும் பணியில் தீவிரமாக மாநில அரசு ஈடுபட்டுவருகிறது” என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த் சிங் தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் 2,065 மருத்துவர்களை தேர்வு செய்து அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வெகு விரைவில் மாநிலத்தில் உள்ள வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

”மருத்துவர்கள் பற்றாக்குறை நிலைமை எந்த மருத்துவமனையிலும் இருக்கக்கூடாது. அதற்கேட்ப அந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள் முதலில் நியமிக்கப்படுவார்கள்” என்று சித்தார்த் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், கோராக்பூர் பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.