ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 03:06

காபூல்,

ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்திற்கு அருகே தற்கொலைப் படையினர் வெடி குண்டுத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 பேர் பலியானார்கள்.

கிரிக்கெட் மைதானத்தில் இருந்த பாதுகாப்பு படை போலீசார் தற்கொலைப் படையினரை கிரிக்கெட் மைதான கூட்டத்தில் நுழை விடாமல் அவர்களை நுழைவாயில் தடுத்து நிறுத்தியதால் நடக்க இருந்த பெரும் உயிரிழப்புச் சேதம் தடுக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் கிரிக்கெட் மைதான நுழைவாயில் நின்றுக் கொண்டிருந்த பாதுகாப்பு படை போலீசார் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  மற்றும் 5 பேர் காயமடைந்தனர். என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.