பிரேசில் அதிபர் மைக்கேல் தேமர் மீது ஊழல் வழக்கு

பதிவு செய்த நாள் : 13 செப்டம்பர் 2017 16:27

சாவோ பவுலோ

பிரேசில் அதிபர் மைக்கேல் தேமர் மீது புதிய ஊழல் வழக்கு விசாரணை நடத்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

பிரேசில் அதிபர் மைக்கேல் தேமர் தனது பதவியை பயன்படுத்தி சாவோ பவுலோ பகுதிக்கு அருகில் இருக்கும் சாண்டோஸ் துறைமுகத்தில் நிறுவனம் ஒன்றை நடத்திவருவதாக குற்றஞ்சாட்டப்பட்டார். அதற்கான ஆதாரங்களை வழக்கறிஞர்கள் வைத்துள்ளதால், இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை நடத்தலாம் என்று நீதிபதி லூயிஸ் ராபர்டோ பர்ரோசோ இன்று உத்தரவிட்டார்.

பிரேசில் மூத்த வழக்கறிஞர் ராட்ரிகோ ஜானாட் இந்த வழக்கு விசாரணையில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பொறுப்பில் இருப்பார். அதிபர் தேமரால் நியமனம் செய்யப்பட்ட ராக்வெல் டாட்ஜ் வரும் திங்கட்கிழமை முதல் இந்த வழக்கு விசாரணையை நடத்துவார்.

இரண்டு வழக்கறிஞர்களும் ஒருமனதாக அதிபர் மைக்கேல் தேமர் குற்றஞ்சாட்டப்பட்டால், மூன்றில் 2 பங்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் அவருக்கு தண்டனை வழங்க அனுமதி அளிக்கவேண்டும். கடந்த ஜூலை மாதம் அதிபர் தேமர் இறைச்சி தயாரிப்பாளர்களால் லஞ்சம் பெறூவதாக வழக்கறிஞர் ஜானட் குற்றஞ்சாட்டப்பட்டார். பின்னர் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் மூலம் அந்த வழக்கில் இருந்து தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.