நிச்சயிக்கப்படும் திருமணங்களில் விவாகரத்து குறைவு! – லட்சுமி

பதிவு செய்த நாள் : 07 செப்டம்பர் 2017பெற்­றோ­ரால் நிச்­ச­யிக்­கப்­பட்ட திரு­ம­ணத்­தில் பெற்­றோருக்கு தெரிந்த அல்­லது உங்­க­ளது நெருங்­கிய உற­வி­னர்­க­ளுக்கு தெரிந்த ஒரு பெண் / ஆணை தேர்ந்­தெ­டுக்­கின்­றாள். இவர் தான் நீ திரு­ம­ணம் செய்து கொள்ள போகி­றா­வர் என்று பெற்­றோர் அறி­மு­கப்­ப­டுத்­திய பின்­னர் தான் இந்த உற­வில் காதல் என்­பது மல­ரு­கி­றது. இன்­றைய நவீன உல­கத்­தில் நிச்­ச­யத்­திற்கு பின்­னர் மண­மக்­கள் பேசிக்­கொள்ள பெற்­றோர்­கள் அனு­மதி கொடுத்­து­விட்­ட­னர்.

இத­னால் நிச்­ச­யத்­திற்கு பின்­னர் கூட காத­லிக்­க­லாம் என்ற நிலை உரு­வா­கி­விட்­டது. பெற்­றோர் நிச்­ச­யிக்­கப்­பட்ட திரு­ம­ணங்­கள் மிக­வும் வலி­வா­னவை. அதற்­கான கார­ணங்­களை தெரிந்­து­கொள்­ளுங்­கள்.

உங்­க­ளுக்கு ஏற்ற துணை

பெற்­றோர் நிச்­ச­யிக்­கப்­ப­டும் திரு­ம­ணம் என்­பது படிப்பு, பொரு­ளா­தா­ரம், காலாச்­சா­ரம் என அனைத்­தி­லும் உங்­க­ளுக்கு பொருத்­த­மான துணையை தேர்ந்­தெ­டுக்கப்படுகிறது. அவர்­கள் நீங்­கள் காத­லிக்­கும் ஒரு­வரை தேர்ந்­தெ­டுப்­ப­தில்லை. ஆனால் வருங்­கா­லத்­தில் நீங்­கள் காத­லிக்க ஏற்ற துணையை தேர்ந்­தெ­டுக்­கின்­ற­னர்.

திரு­ம­ண­திற்கு பின் காதல்

பெற்­றோர் நிச்­ச­யிக்­கப்­பட்ட திரு­ம­ணத்­தில் நான் கடைசி வரை உன்­னு­டன் இருப்­பேன் என்று ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் சத்­தி­யம் செய்து கொண்டு வாழ தொடங்­கிய பின் அவர்­க­ளுக்­குள் காதல் மல­ரு­கின்­றது. இந்த காதல் மெது­வாக துணை­யின் அர­வ­ணைப்பு, கவ­னிப்பு ஆகி­ய­வற்றை கண்டு வரு­கி­றது.

இது உண்­மை­யான காத­லாக மட்­டுமே இருக்க முடி­யும். வெறும் ஈர்ப்­பாக இருக்க வாய்ப்­பு­கள் இல்லை. இந்த காத­லில் உண்­மை­யான அக்­கறை மற்­றும் மரி­யாதை ஒரு­வர் மீது ஒரு­வ­ருக்கு இருக்­கி­றது.

விவா­க­ரத்­து­கள் குறைவு

பெற்­றோர் நிச்­ச­யிக்­கப்­பட்ட திரு­ம­ண­மா­னது இரு உள்­ளங்­க­ளின் இணைப்­பாக மட்­டு­மல்­லா­மல், இரு குடும்­பங்­க­ளின் இணைப்­பாக இருக்­கி­றது. இவ்­வாறு இரண்டு குடும்­பங்­கள் இணை­வ­தால் உற­வு­கள் இன்­னும் பல­மா­கின்­றது.

இத­னால் கண­வன் மனைவி இரு­வ­ருக்­கும் சமூ­கத்­தில் அவர்­க­ளது முக்­கி­யத்­து­வம் என்­ன­வென்று தெரி­யும் இத­னால் பெரும்­பா­லும் அவர்­கள் விவா­க­ரத்து செய்ய முன்­வ­ரு­வ­தில்லை.

பெற்­றோ­ரின் கவ­னம்

பெற்­றோ­ரி­னால் நிச்­ச­யிக்­கப்­பட்ட திரு­ம­ணம் என்­ப­தால் அவர்­க­ளது கணிப்பு தவ­றா­கி­விட கூடாது என்­ப­தற்­கா­க­வும், பிள்­ளை­கள் ஒரு­வரை விட்டு ஒரு­வர் வில­கி­விட கூடாது என்­ப­த­னா­லும், இரு வீட்டு பெற்­றோர்­க­ளின் கண்­க­ளும் உங்­கள் மீதே தான் இருக்­கும். இது சில சம­யங்­க­ளில் உங்­க­ளுக்கு சளிப்பை உண்­டாக்­கி­னால் உறவை காப்­பாற்ற இது உத­வு­கி­றது.

விலகி செல்­வது கடி­னம்

நீங்­கள் ஒரு­வேளை ஒரு சின்ன சண்டை போட்­டுக்­கொண்­டால் கூட உங்­க­ளது துணை­யின் வீட்­டி­ன­ருக்கு அதற்­கான கார­ணத்தை சொல்ல வேண்­டி­யி­ருக்­கும். இதுவே வில­கு­வ­தென்­றால் நீங்­கள் அனை­வ­ருக்­கும் பதில் சொல்ல கட­மைப்­பட்­டி­ருக்­கி­றீர்­கள். இத­னால் நிச்­ச­யிக்­கப்­பட்ட திரு­ம­ணத்­தில் வில­கிச்­செல்­வது கடி­னம்.