ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 16–8–17

பதிவு செய்த நாள் : 16 ஆகஸ்ட் 2017

இளையராஜா ஏற்ற சவால்!

(சென்ற வார தொடர்ச்சி...)

இளை­ய­ரா­ஜா­வின் முதல் பட­மான “அன்­னக்­கி­ளி”யை எடுத்த பஞ்சு அரு­ணா­ச­லம் இந்த ஆண்­டில் ஒரு படத்­தைத் தயா­ரித்­தார். படத்­திற்கு கதை – வச­னம் பஞ்சு சார் எழுத, சுஜாதா திரைக்­கதை அமைத்­தி­ருந்­தார். படத்தை இயக்­கி­ய­வர் எஸ்.பி. முத்­து­ரா­மன். படத்­தின் நாய­கன் ரஜினி, நாயகி ஸ்ரீதேவி. இவ்­வ­ளவு சொல்­லிய பின் படத்­தின் பெய­ரைச் சொல்­லவே தேவை­யில்லை. ஆம்! படத்­தின் பெயர் ‘ப்ரியா’.

இந்த கால­கட்­டத்­தில் ‘நினைத்­தாலே இனிக்­கும்’ போன்ற படங்­க­ளுக்கு எம்.எஸ்.வி. இசை­ய­மைத்­தி­ருந்­தார். இளை­ய­ராஜா நாட்­டுப்­பு­றக் கதை­க­ளுக்­குத்­தான் நன்­றாக இசை­ய­மைப்­பார், இது மாதி­ரி­யான கதை­க­ளுக்கு நன்­றாக இசை­ய­மைக்­க­மாட்­டார் என்­பது போன்ற விஷ­யங்­களை பஞ்சு சாரி­டம் சில பேர் சொல்­லி­யும் இந்த படத்­திற்கு இளை­ய­ரா­ஜா­தான் இசை என்று ஆணித்­த­ர­மாக சொன்­னார். இந்த படத்தை ஒரு சவா­லா­கவே எடுத்­துக் கொள்­கி­றேன் என்று சொல்லி இசை­ய­மைக்க ஒத்­துக் கொண்­டார் இளை­ய­ராஜா. வெளி நாட்­டில் நடப்­பது போன்ற ஒரு கதைக்­க­ளம். இந்த படத்­தின் பாடல்­கள் மிக­வும் வித்­தி­யா­ச­மாக இருக்க வேண்­டும் என்று விரும்­பி­னார் பஞ்சு சார்.

இந்த படத்­திற்­கான பாடல்­களை “ஸ்டீரியோ” முறை­யில் பதிவு செய்­தால் என்ன என்று பஞ்சு சாரி­டம் இளை­ய­ராஜா கேட்க, அப்­ப­டியே செய்­வோம் என்­றார். ஆனால் அதற்­கான கரு­வி­கள் இங்கு எந்த ஸ்டூடி­யோ­வி­லும் அதி­கம் இல்­லையே என்று பஞ்சு சார் சொல்ல, கே.ஜே. ஜேசு­தாஸ் தனது மெல்­லி­சைக் கச்­சே­ரி­க­ளில் இது­போன்ற சவுண்ட் சிஸ்­டம் அமைத்து ரசி­கர்­களை மெய்­ம­றக்­கச் செய்து கொண்­டி­ருந்­தது இளை­ய­ரா­ஜா­விற்கு ஞாப­கம் வர ஜேசு­தா­சி­டம் இது பற்றி கேட்டு பார்ப்­போம் என்று முடிவு செய்­த­னர். இவர்­கள் இந்த யோச­னையை ஜேசு­தாஸ் அவர்­க­ளி­டம் சொல்­லும் நேர­மும், அவர் தனது தரங்­கிணி ஸ்டூடி­யோ­விற்­காக புதி­தாக கரு­வி­கள் வாங்க நினைத்­துக் கொண்­டி­ருந்த நேர­மும் ஒன்­றாக இருக்க, ஜேசு­தாஸ் தனது தரங்­கிணி ஸ்டூடி­யோ­விற்கு “ஸ்டீரியோ” முறை­யில் பாடல்­கள் பதிவு செய்­வ­தற்­கான கரு­வி­களை வாங்­கி­னார்.

இந்த படத்­திற்­கான பாடல் கம்­போ­ஸிங்­கிற்கு பெங்­க­ளூ­ரு­வுக்கு போக­லாம் என்று பஞ்சு சார் சொன்­ன­தால் பெங்­க­ளூ­ரு­வுக்கு சென்­ற­னர். ஆனால் மற்ற படங்­க­ளுக்கு கம்­போ­ஸிங் நடப்­பது போல இந்த படத்­திற்­கான கம்­போ­ஸிங் ஓட்­ட­லிலோ, ஸ்டூடி­யோ­விலோ நடக்­க­வில்லை. முதல் நாள் ஓட்­ட­லுக்­குத்­தான் சென்­ற­னர். ஆனால் இளை­ய­ரா­ஜா­விற்கு ஏனோ திருப்தி வர­வில்லை. உடனே பஞ்சு சாரி­டம், “அண்ணே! பெங்­க­ளூ­ரு­வுக்கு வந்து ரூமிற்­குள் அடைந்து கிடப்­பதா? லால்­பாக், கப்­பன்­பாக் போன்ற இடங்­க­ளுக்கு சென்று கம்­போஸ் செய்­வோம்” என்று கேட்க, பஞ்சு சாரும் சிரித்­துக்­கொண்டே “சரி அங்­கேயே போவோம்” என்­றார்.

காரில் வாத்­தி­யங்­களை ஏற்­றிக் கொண்டு லால்­பாக்­கில் ஆள் நட­மாட்­டம் அதி­கம் இல்­லாத ஒரு பகு­தியை தேர்ந்­தெ­டுத்து அங்கே ஒரு பெட்­ஷீட் விரித்து கம்­போ­சிங் செய்ய ஆரம்­பித்­த­னர். இப்­ப­டியே ஒவ்­வொரு நாளும் ஒவ்­வொரு இடத்­தில் கம்­போ­ஸிங் நடந்­தது. 6 பாடல்­க­ளுக்­கும் கம்­போ­சிங் முடிந்­தது. சென்னை திரும்­பி­னர். முதன்­மு­த­லாக இந்த முறை­யில் பதிவு செய்த பாடல் “என்­னு­யிர் நீதானே” என்ற பாடல். பாடல் அவ்­வ­ளவு துல்­லி­ய­மா­க­வும், கேட்­ப­தற்கு தெளி­வா­க­வும் இருந்­தது. உலக தரத்­திற்கு நிக­ரான பாடலை பதிவு செய்­த­தில் ஏக மகிழ்ச்சி.