தட­கள வீரர்­கள் பையில் கைவைக்­கும் நடா

பதிவு செய்த நாள் : 22 ஜூலை 2017 08:44

புனே : 

தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நாடு முழு­வ­தும் விளை­யாட்டு  வீரர்­க­ளி­டம் ஊக்க மருந்து தடுப்பு சோத­னையை மேற்­கொண்­டுள்­ளது. தட­கள வீராங்­கனை மன்­பி­ரீத்­க­வுர் அடுத்­த­டுத்து இரண்டு முறை நடா­வின் சோத­னை­யில் சிக்கி, தன் உலக தட­கள சாம்­பி­யன்­ஷிப் வாய்ப்பை இழந்­துள்­ளார். தற்­கா­லி­க­மாக நீக்­க­மும் செய்­யப்­பட்­டுள்­ளார். இந்­நி­லை­யில், தேசிய ஊக்­க­ம­ருந்து தடுப்பு முகமை, நாடு முழு­வ­தும் உள்ள விளை­யாட்­டுத்­துறை நிர்­வா­கி­க­ளுக்கு எழு­திய கடி­தத்­தில், ‘சில தட­கள வீரர்­கள் வெளி­நா­டு­க­ளுக்கு செல்­லும்­போ­தும்/திரும்­பும்­போ­தும் தடை செய்­யப்­பட்ட ஸ்டீராய்டு / ஊக்க மருந்­து­களை கொண்டு செல்­வ­தாக தெரி­ய­வந்­துள்­ளது. இது­கு­றித்து நடா துரித நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ளது’ என்று குறிப்­பிட்­டு­இ­ருந்­தது.

நடா இயக்­கு­னர் நவீன் அகர்­வால் இது­கு­றித்து நிரு­பர்­க­ளி­டம் பேசு­கை­யில், “சில தட­கள வீரர்­களை பரி­சோ­தித்­த­போது அவர்­கள் தடை செய்­யப்­பட்ட ஊக்க மருந்­து­களை பயன்­ப­டுத்­தி­யது உறு­தி­யா­கி­யுள்­ளது. அவை வெளி­நா­டு­க­ளில் மட்­டும் கிடைப்­பவை. இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­ப­டு­பவை அல்ல. குறிப்­பாக மத்­திய ஆசியா, கிழக்கு ஐரோப்­பா­வில் அதி­க­ள­வில் கிடைக்­கும் ஊக்க மருந்­து­களை நமது தட­கள வீரர்­கள் பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னர். எனவே, விளை­யாட்டு வீரர்­கள் ஊக்க மருந்து பயன்­ப­டுத்­து­வதை தடுக்­கும் வகை­யில், நாடு முழு­வ­தும் விமான நிலை­யங்­க­ளில் வெளி­நா­டு­க­ளில் இருந்து வரும் தட­கள வீரர்­க­ளின் பய­ணப் பைகளை பரி­சோ­தனை செய்ய முடிவு செய்­துள்­ளோம்” என்­றார்.