ஷரபோவாவை டென்னிசை விட்டே விரட்ட வேண்டும்

பதிவு செய்த நாள் : 28 ஏப்ரல் 2017 02:18

இஸ்தான்புல்: 

கனடாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையும், மகளிர் டென்னிஸ் தர வரிசையில் 59வது இடத்தில் உள்ளவருமான பவுச்சர்ட் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற டிஆர்டி வேர்ல்ட் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, “ என்னைப் பொறுத்தவரை மரியா ஷரபோவா நேர்மையானவர் இல்லை. அவர் ஒரு ஏமாற்றுக்காரர். விளையாட்டைப் பொறுத்தவரை, ஏமாற்றும் எண்ணம் கொண்டவர்களை தடை செய்த பின்னர், மீண்டும் அவர்களை விளையாட்டில் அனுமதிப்பது தவறு. அத்துடன், அவருக்கு வைல்ட் கார்டு அனுப்பியதன் மூலம், பெண்கள் டென்னிஸ் கூட்டமைப்பு நிர்வாகிகள் இளம் தலைமுறை வீரர்களுக்கு தவறான வழி காட்டுதல்களை உருவாக்கியுள்ளனர். உண்மையை சொல்லப்போனால், ஷரபோவாவுக்கு டென்னிசில் பங்கேற்க ஆயுள் கால தடையை விதித்திருக்க வேண்டும்” என்றார்.