சிதம்பரம் நடராஜர் மற்றும் அம்பாளுக்கு தங்க கிரீடம் மற்றும் ஒட்டியாணம் காணிக்கை

பதிவு செய்த நாள்

31
ஆகஸ்ட் 2016
18:48

சென்னை.

சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற சிவ ஸ்தலமான ஸ்ரீநடராஜர் திருக்கோவிலில், வரலாற்றிலேயே முதன் முறையாக ருத்ர மந்திரத்தை ஒரு லட்சம்முறை ஓதும் லட்ச ருத்ரபாராயணமும், கோடி வில்வ அர்ச்சனையும் ஜூலை 28 தொடங்கி செப். 15 வரை நடை பெற்றுவருகிறது.

இதனை சென்னையைச் சேர்ந்த கார்ப்பரேட் கிளினிக் நிறுவனத்தின் இயக்குனர்களான ராமகிருஷ்ணன்-காயத்திரி குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நடராஜருக்கு 380 கிராம் எடையுள்ள நவரத்தினம் பதித்த தங்க கிரீடமும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு 280 கிராம் எடையுள்ள தங்க ஒட்டியாணமும் வழங்கப்பட்டது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.25லட்சம் ஆகும்.

சிதம்பரம் நடராஜர்கோயில் வரலாற்றிலேயே நவரத்தினம் பதித்த தங்ககிரீடமும் அணிவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அண்மையில் (23 ஆகஸ்ட் 2016) அன்று மேளதாளம் முழங்க ஆபரணங்கள் எடுத்துவரப்பட்டு நடராஜருக்கும், அம்பாளுக்கும் அணிவிக்கப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அன்னபூரணி கிரகத்தை சேர்ந்த கோயில் தீட்சிதர்கள் செய்திருந்தனர்.